சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி (SVPISTM) தனது 2025 பட்டதாரிகள் தினத்தை தேசிய தொழில்நுட்ப ஜவுளி மிஷனின் (NTTM) கீழ் அமைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப ஜவுளி ஆய்வகத்தின் திறப்பு விழாவுடன் இணைந்து கோலாகலமாகக் கொண்டாடியது.

இயக்குனர் டாக்டர் பி. அல்லி ராணி தலைமையில் நடைபெற்ற விழாவில், நிறுவனம் தொழில்துறை ஒருங்கிணைந்த கல்வி, நிலைத்தன்மை மற்றும் புதுமை நோக்கில் முன்னேறி வருவதை அவர் வலியுறுத்தினார்.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ பவன்குமார் ஜி. கிரியப்பனவர், தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, ஜவுளித் துறையில் தொழில்முனைவோர் மற்றும் புதுமையாளர்களாக உருவாக மாணவர்களை ஊக்குவித்தார்.

பிரீமியர் ஃபைன் லினன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சாந்தி ஸ்ரீனிவாசன், கௌரவ விருந்தினராக உரையாற்றி ஆய்வகத்தைத் திறந்து வைத்தார்.

ஆராய்ச்சி, மின் வணிகம் மற்றும் வாசிப்பு பழக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், மாணவர்கள் ஆர்வமுடனும் மாற்றத்துக்குத் தயாராகவும் இருக்க வேண்டும் என்றார்.



