டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது புதிய மின்சார வாகனமான டிவிஎஸ் ஆர்பிட்டர் -ஐ தமிழ்நாட்டில் அறி முகப்ப டுத்துகிறது. தமிழ்நாட்டில் கோவையில் நடைபெற்ற டிவிஎஸ் ஆர்பிட்டரை அறிமுகப்படுத்திய நிகழ்ச்சியில் டிவிஎஸ் மோட்டார் நிறு வனத்தின் மார்க்கெட்டிங்-ஈவி பிசினஸ் டிஜிஎம் ரிஷு குமார் கலந்துகொண்டு அறிமுகப்படுத்தி பேசினார். அன்றாட பயணத்தை மறுவரையறை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் டிவிஎஸ் ஆர்பிட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் 158 கிமீ வரை பயணிக்கக்கூடிய ஐடிசி வரம்பை அளிக்கிறது.
மேலும் க்ரூஸ் கண்ட்ரோல், 34-லிட்டர் பூட் ஸ்பேஸ், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் மேம்பட்ட இணைப்பு தொழில்நுட்ப அம்சங்கள் என இவ்வாகனப் பிரிவிலேயே முதல் அம்சங்களை அதிகம் வழங்குகிறது. மேலும், இருசக்கர வாகன தொழில்துறையில் முதல் முறையாக 14” முன் சக்கரத்துடன் டிவிஎஸ் ஆர்பிட்டர் அறிமுகமாகியுள்ளது.
இதன் விலை ரூ.1,03,100 (எக்ஸ்-ஷோரூம், பிஎம் இ டிரைவ் திட்டம் உட்பட) என்ற கவர்ச்சிகரமான விலையில் மேம்பட்ட வசதி மற்றும் அபாரமான செயல்திறனை வழங்குகிறது. டிவிஎஸ் ஆர்பிட்டர் நியான் சன்பர்ஸ்ட், ஸ்ட்ராடோஸ் ப்ளூ, லூனார் கிரே, ஸ்டெல்லர் சில்வர், காஸ்மிக் டைட்டானியம் மற்றும் மார்ஷியன் காப்பர் போன்ற அற்புதமான வண்ணகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் ஆர்பிட்டர் இணைப்பு தொழில் நுட்பத்தினால் செயல்படும் மொபைல் செயலி, முன்பக்கம் அட்டகாசமான வைசருடன் முன் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் போன் அழைப்பை அறிவிக்கும் திரையுடன் கூடிய வண்ண எல்சிடி போன்ற மேம்பட்ட அம்சங்களுடன் டிவிஎஸ் ஆர்பிட்டர் அட்டகாசமாக களமிறங்கியுள்ளது. இதன் 3.1 கிலோவாட் பேட்டரி மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏரோடைனமிக் ஆற்றல், தங்கு தடையில்லாத நிலையான, அபாரமான செயல்திறனுடன் கூடிய நீட்டிக்கப்பட்ட வரம்பை வழங்குகிறது.
இது குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சீனியர் வைஸ் பிரசிடெண்ட் – ஹெட், இவி பிசினெஸ் & ஹெட் கார்பொரேட் ப்ராண்ட் & மீடியா அனிருத்தா ஹால்டார் கூறுகையில் “மின்சார வாகனத் துறையில் எங்கள் தலைமைத்துவத்தை ஒருங்கிணைப்பதற்கும், நம்பிக்கை மற்றும் புதுமையின் வலுவான அடித்தளத்துடன் இந்தியாவின் மின்சார வாகனப் பயணத்தை இயக்குவதற்கும் நாங்கள் அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறோம்“ என்றார்.



