fbpx
Homeபிற செய்திகள்கதிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கோலாகலம்

கதிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கோலாகலம்

கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (2019 முதல் 2022) மற்றும் (2020 முதல் 2023) ஆகிய ஆண்டுகளில் பயின்ற 700 மாணவர்களுக்குப் மூன்றாமாண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கதிர் கல்வி குழுமத்தின் தலை வர் கதிர், செயலர் லாவண்யா ஆகியோர் தலைமை வகித்தனர். கதிர் கல்வி குழுமத்தின் துணைத் தலைவர் மிதிலேஷ், இணைச் செயலர் விது பிரதிக்ஷா ஆகியோர் முன் னிலை வகித்தனர். இதில் கல்லூரி முதல்வர் கற்பகம் வரவேற்புரை ஆற்றினார்.

தொடர்ந்து லீ ராயல் நிறுவனத்தின் தலைவரும் பி.ஜி.பி கல்வி குழுமத்தின் தலைவருமான டாக்டர் பழனி.பெரியசாமி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, கல்வி என்பது வெறும் பட்டம் பெறுவதற்கான பயணம் மட்டுமல்ல, வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும் என பேசினார்.

தொடர்ந்து கதிர் கல்வி குழுமத்தின் நிறுவனர் கதிர் மற்றும் லாவண்யாவின் கல்வி வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பை அவர் பாராட்டினார்.

மாணவர்களுக்கு எதிர் காலம் பல வாய்ப்புகளுடன் காத்திருக்கின்றது. புதிய சூழ்நிலைகளில் தன்னைப் பதுக்கி கொள்ளும் திறன் அவசியம் என்றும், மாற்றங்களை ஏற்கும் மனப் பான்மை வளர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “தன்னம்பிக்கையும், தெளிவான கனவுகளும் நம் வாழ்க்கையை மாற்ற வல்லவை. தன்னம்பிக் கையுடன் செயல்பட்டால் சாதிக்க இயலும்.

மாணவர்கள் இந்தியா வின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்க முடியும். முயற்சி செய்பவருக்கே வெற்றி. மாணவர்கள், புதியதை அஞ்சாமல் ஏற்றுக் கொள்ளுங்கள், உங் கள் கதையை நீங்களே எழுதுங்கள்” என்றார்.
இந்நிகழ்வில் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img