பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம் மாள் கல்லூரியில் சாலை பாதுகாப்பு ரோந்து துவக்க விழா நடைபெற் றது. இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தின் போக்குவ ரத்து திட்டமிடல் சார்ந்த கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் சிற்றரசு கலந்து கொண்டு சாலைப் பாது காப்பு விதிமுறைகள் குறித்து பேசினார். அவரைத்தொடர்ந்து தலைமை போக்குவரத்துக் காவலர் ரங்கப்பிரபு சாலைப் பாதுகாப்பு ரோந்தின் முக்கியத்துவம் குறித்து மாணவியர்கள் மத்தியில் விளக்கினார். மேலும் அணிவகுப்பு அதிகாரி கமல்ஹாசன் பாதுகாப்பான பயணத்தை சாலையில் மேற்கொள்வது குறித்து தனது அனுபவங் களை பதிவு செய்தார்.
தொடர்ந்து இந்நிகழ்ச் சிக்கு வந்தவர்களை கிருஷ் ணம்மாள் கல்லூரியின் தமிழ்த்துறை இணைப் பேராசிரியரும் விருட்சம் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ரேணுகா வரவேற்றார். நிகழ்வில் நிறை வாக சாலைப் பாதுகாப்பு ரோந்து மன்றத்தின் மாணவ தலைவி காவிய ஸ்ரீ நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஒருங் கிப்பாளர்களான பேராசி ரியர்கள் காயத்ரி, சங் கீதா, துரைஈஸ்வரி நடத்தினர். இந்நிகழ்வு மாணவர்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு குறித்த நல்லதொரு புரிதலை ஏற்படுத்தியது. இந்நிகழ்வில் மாணவர்கள், காவலர்கள், பேராசிரியர்கள் என பல ரும் கலந்து கொண்டனர்.



