கே.எம்.சி.எச். பார்மசி கல்லூரியில், கல்லூரி மகளிர் மேம்பாட்டு பிரிவு சார்பில், சர்வதேச பெண்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வர் முனைவர் அ.ராஜசேகரன் வரவேற்றார்.
கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையின் உட்சுரப்பியல் ,நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வித்யா ராஜீவ் ஜஹாகிர்தர் பேசும்போது, பெண்களின் மனோபாவம் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய விதம், பிசிஓடி, மாதவிடாய் முடிவுறும் பருவம் மற்றும் நீரிழிவு போன்ற பல்வேறு சுகாதார பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தார்.
ஹெச்பிவி தடுப்பூசி மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் குறித்த மதிப்புமிக்க தகவல்களையும் அவர் வழங்கினார்.
“செல்வம் மற்றும் அதிகாரத்திற்கான பெண்கள் அதிகாரம்“
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பல போட் டிகள் நடத்தப்பட்டன.
“செல்வம் மற்றும் அதிகாரத்திற்கான பெண்கள் அதிகாரம்“ என்ற தலைப்பில் சொற்பொழிவு நடத்தப்பட்டது.
பாலின சமத்துவம் குறித்து மாணவர்கள் சிறப்பு மையம் நிகழ்ச்சியை நடத்தினர்.
“கல்வி முறை பாலின சமத்துவத்தை கற்பிக் கிறதா” என்ற தலைப்பில் இளங்கலை மற்றும் முது கலை மாணவர்கள் பங்களிப்புடன் விவாதம் நடத்தப்பட்டது.
சிறப்புவிருந்தினர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார். துணை முதல்வர் முனைவர் கே.சுரேஷ் குமார் நன்றி கூறினார்.