புதிய கல்விசார் கூட்டாண்மை செயல்பாட்டை மேற்கொள்வதற்காக இந்தியாவைச் சேர்ந்த ஓ.பி.ஜிண்டால் குளோபல் யுனிவர் சிட்டியும், யுஎஸ்ஏ -ன் சியாட்டில் யுனிவர்சிட்டியும் ஒருங்கிணைந்திருக்கின்றன.
உயர்கல்வித் துறையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் புதிய மற்றும் புத்தாக்க வாய்ப்புகளை உருவாக்குவதற்கு இந்த கூட்டாண்மை ஒத்துழைப்பு நடவ டிக்கை உதவும்.
சியாட்டில் பல்கலைக்கழகத்திலிருந்து சென்னைக்கு வருகை தந்திருக்கும் அதன் உயர் நிர்வாக மற்றும் தலைமைத்துவ குழுவினர், தமிழகத்தில் இரு முதன்மையான கல்வி நிறுவனங்களாகப் புகழ் பெற்றிருக்கும் லயோலா கல்லூரி, விநாயகா மிஷன்ஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷன் ஆகிய கல்வி நிறுவனங்களுடன் இத்தகைய கூட்டுவகிப்பு செயல்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (MOU) மேற்கொண்டிருக்கிறது.
சியாட்டில் யுனிவர்சிட்டியின் பிரசிடெண்ட் புரொஃபசர் எடுவர்டோ எம். பெனால்வர், டீன் புரொஃபசர் ஆண்டனி இ. வரோனா (ஸ்கூல் ஆஃப் லா), டீன் புரொஃபசர் (டாக்டர்) அமித் சுக்லா (காலேஜ் ஆஃப் சயின்ஸ் – இன்ஜினியரிங்), டீன் புரொஃபசர் (டாக்டர்) ஜோசப் எம். பிலிப்ஸ் (ஆல்பெர்ஸ் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் & எக்கனாமிக்ஸ்), அசோசியேட் டீன் புரொஃபசர் (டாக்டர்) மது டி. ராவ் (ஆல்பெர்ஸ் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் – எக்கனாமிக்ஸ்) ஆகியோரை உள்ளடக்கிய யுஎஸ்ஏ, சியாட்டில் பல்கலைக்கழக உயரதிகாரிகள் குழு தற்போது இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறது.
புரொஃபசர் எடுவர்டோ எம். பெனால்வர் கூறியதாவது: சியாட்டில் பல்கலைக்கழகம் என்பது, பசிபிக் நார்த்வெஸ்ட் பிராந்தியத்தில் சியாட்டில் பகுதியில் இயங்கி வரும் மிகப்பெரிய தனியார்துறை பல்கலைக்கழகமாகும்.
சியாட்டில் பல்கலை
செவிலியர் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறி வியல் கல்லூரி, சட்டம் மற்றும் பிசினஸ் உட்பட, ஆறு கல்லூரிகளை சியாட்டில் பல்கலை கொண்டிருக்கிறது.
உங்களது அனுபவத்திலிருந்து எமது மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும். உங்களது மாணவர்களும், கல்வியாளர்களும் எமது அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள முடியும் என்பது நிச்சயம் என்றார்.
ஓபி ஜிண்டால் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் புரொஃ பசர் சி. ராஜ்குமார் கூறியதாவது: இந்தியாவிலுள்ள முன்னணி பல்கலைக்கழகங்களுடன் கூட்டாண் மைகளை உருவாக்க சியாட்டில் பல்கலை திட்டமிட்டபோது, தமிழ்நாடு மாநிலத்தையும் மற்றும் சென்னை மாநகரையும் தாங்கள் வருகை தரும் அமைவிடங்களாக தேர்வு செய்தது பொருத்தமானதே.
தேசிய கல்விக்கொள்கையே இந்த கூட்டாண்மை நடவடிக்கைக்கான மூன்றாவது காரணமாக இருக்கிறது என்றார்.



