தூத்துக்குடி மாவட்டம், சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், வட்டாரப் போக்குவரத்துத்துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம், குறும்பட வெளியீட்டு விழா நடந்தது.
விழாவில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில் ராஜ் பேசியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் சாலைகளில் ஏற்படும் மரணங்களை குறைப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறோம்.
காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள், போக்குவரத்துத்துறை ஆகிய துறைகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். ஒவ்வொரு மாதமும் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
குட்டி காவலர்
சுப்பையா வித்யாலயம் பள்ளி சிறார்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குறும்படம் வெளியிட உள்ளோம். குறும்படத்திற்கு குட்டி காவலர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது முழுக்க, முழுக்க சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு குறும்படம். பள்ளி குழந்தைகளிடம் ஆரம்ப கட்டத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினால் ஒரு நல்ல சமுதாயம் உருவாவதற்கு ஏதுவாக இருக்கும்.
ஒவ்வொரு பள்ளிகளிலும் சாலை பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுக்கள் மூலமாக சாலை பாதுகாப்பு விஷயங்கள் அனைத்தையும் சொல்லிக் கொடுக்கிறோம்.
இன்றைய தினமும் நாம் சாலை பாதுகாப்பு குழு மூலமாக அனைத்து பள்ளிகளிலும் குட்டி காவலன் என்கின்ற குறும்படத்தையும், அதுபோல, போக்குவரத்து சிக்னல்களை எவ்வாறு கடைப்பிடித்து செல்ல வேண்டும் என்பதனை கொண்டு செல்லும் விதமாக இன்று நாம் ஆரம்பித்துள்ளோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 350-ல் இருந்து 390 இறப்புகள் சாலை விபத்துகளால் கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்றுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் ஒரு வருடத்திற்கு சராசரியாக 14 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் இறப்புகள் சாலையில் நடைபெறும் விபத்துகளால் ஏற்பட்டு வருகிறது.
கண்டிப்பாக இவை அனைத் தும் தடுக்கக்கூடிய எண்ணிக்கை தான். அனைத்து துறைகளும் சேர்ந்து செயல்பட்டால், இந்த எண்ணிக்கையினை குறைக்க முடியும். இந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, ஒவ்வொரு மாதமும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து அனைத்து சாலைக ளும், சாலை விபத்து இல்லாத சாலைகளாக மாற்றுவதற்கும், எல்லா சிக்னல்களையும் சரி செய்வதற்கும், கூட்டங்களில் முடிª வடுக்கப்பட்டு எந்தெந்த சாலைகள் பழுதடைந்துள்ளதோ, அதை சரி செய்யும் பணிகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.
அதேபோல், பொதுமக்களுக் கும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தும்போது, சாலைக ளினால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையினை அனைவரா லும் கணிசமாக குறைக்க முடியும் என்றார். முன்னதாக, மில்லர்புரம் ஏ.ஆர்.கேம்ப்-ல் துவங்கி முத்துநகர் கடற்கரை வரை ஹெல்மேட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு மோட்டார் சைக் கிள் பேரணியில், மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாநகராட்சி ஆணையர் தி.சாருஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சி.விநாயகம் (தூத்துக்குடி), கு.நெடுஞ்செழி யபாண்டியன் (கோவில்பட்டி), மாவட்ட கல்வி அலுவலர் த.தமிழ் செல்வி, தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு குறும் படம் தயாரித்த குழுவினர், சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.