Homeபிற செய்திகள்ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் ரோபாடிக் அறுவை சிகிச்சை

ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் ரோபாடிக் அறுவை சிகிச்சை

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையில், அதிநவீன 4-ம் தலைமுறை டாவின்சி ரோபாடிக் அறுவை சிகிச்சை முறையைக் கொண்ட அதிநவீன ஆப்பரேஷன் தியேட்டர் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோ தொழில்நுட்பம் அறுவை சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும். இது புற்றுநோய் அறுவை சிகிச்சைகள், சிறுநீரக அறுவை சிகிச்சைகள் மற்றும் மிகக்குறைந்த அளவில் திறக்கப்பட்டு செய்யப்படும் இதய அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட சிக்கலான மற்றும் சவாலான அறுவை சிகிச்சைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

ரோபாடிக் தொழில்நுட்ப உதவியுடன் கூடிய அறுவை சிகிச்சை என்பது வழக்கமாக பின்பற்றப்படும் அறுவை சிகிச்சை நுட்பங்களை விடவும் அதிக துல்லியம், நெகிழ்வுத்தன்மை மற்றும் கட்டுப்பாட்டுடன் பல வகையான சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்திட மருத்துவர்களுக்கு வழிவகை செய்கிறது. 

இந்நிலையில், இந்த புதிய அறுவை சிகிச்சை அரங்கினை  மாநகராட்சி ஆணையாளர்  சிவகுரு பிரபாகரன் நேற்று துவக்கி வைத்தார். அப்போது, குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின் அறங்காவலர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img