fbpx
Homeபிற செய்திகள்ஜி.கே.என்.எம் மருத்துவமனை மருத்துவ சேவையில் புதிய மைல்கற்களை எட்டியது

ஜி.கே.என்.எம் மருத்துவமனை மருத்துவ சேவையில் புதிய மைல்கற்களை எட்டியது

கோவையில் செயல்பட்டு வரும் ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை (ஜி.கே.என்.எம்.) தனது 74-வது நிறுவனர் தினத்தை மணி மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடியது. விழாவுக்கு கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். குப்புசாமி நாயுடு அறக்கட்டளை தலைவர் ஆர். கோபிநாத், துணைத் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி, தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் ஆசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த புறநோயாளர் மருத்துவ மையமாக அங்கீகாரம் பெற்றுள்ள ஜி.கே.என்.எம்., ரோபோடிக் அறுவை சிகிச்சை, இதய மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்ட நவீன மருத்துவ சேவைகளில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.


மருத்துவமனை இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது. மேலும், 15 லட்சத்துக்கும் அதிகமான பிரசவங்கள், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட கேத் லேப் சிகிச்சைகள், 50 ஆயிரத்துக்கும் அதிகமான இதய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தமிழகத்தின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையையும் வெற்றிகரமாக செய்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img