fbpx
Homeபிற செய்திகள்ஆன்மிக பொருட்களை விற்பனை செய்யும் கிரி டிரேடிங் நிறுவனம்

ஆன்மிக பொருட்களை விற்பனை செய்யும் கிரி டிரேடிங் நிறுவனம்

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல் படும் கிரி டிரேடிங் நிறுவனம் ஆன்மிகம் சார்ந்த பொருட் களை விற்பனை செய்கிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் தங்களது 2 புதிய கிளைகளை கோவை மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் துவக்கியுள்ளது.

கோவை கிளையை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் கிருஷ்ணன், ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவிலிருந்து சுவாமி பக்தி விரதானந் தாவும் திறந்து வைத்தனர். சேலம் கிளையை சேலம் ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் யதாத்மனந்தா மஹராஜ் திறந்து வைத்தார்.

இது குறித்து கிரி டிரேடிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாரதா பிரகாஷ் கூறுகையில்,
“கோவை மற்றும் சேலத்தில் எங்களது புதிய கிளையை துவக்குவது மகிழ்ச்சியளிக்கிறது.

அதன்படி, கோவை ஆர்எஸ்புரம் தடாகம் தெருவில் எங்களது 3வது கிளையையும், சேலம் அக்ரஹாரம் தெருவில் ராஜ கணபதி கோவில் அருகே சேலத்தில் எங்கள் முதல் கிளையை நிறுவியுள்ளோம்.

இக்கிளைகள் மூலம் இந்த சுற்று வட்டாரத்தில் உள்ள மக்களுக்கு மேலும் சேவைகளை விரிவாக்கமுடியும்“ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img