தனியார் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம் சேலம், உடையாப்பட்டி, தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி, பார்வையிட்டார்.
பின்னர், மாவ ட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
தனியார் பள்ளிகள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளை போக்குவரத்துத் துறை, காவல் துறை, பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆண்டுதோறும் கூட்டாய்வு செய்து இயக்குவதற்குத் தகுதியான வாகனங்கள் என சான் றளிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
அந்த வகையில், இன்றைய தினம் சேலம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலு வலகம் சார்பில் பள்ளி பேருந்துகளுக்கான வரு டாந்திர கூட்டாய்வு நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் 335 தனியார் பள்ளிகளில் இயங்கிவரும் 2,123 பள்ளி பேருந்துக ளுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம் இன்று முதல் 15.05.2024 வரை நடைபெறவுள்ளது.
இன்றைய தினம் பள்ளி வாகன ஆய்வின்போது சோதனைக்கு உட்படுத்தப் பட்ட 180 வாகனங்களில் 17 வாகனங்கள் சிறு குறைபாடுகள் கண்டறியப் பட்டு அவற்றை சரி செய்து மீண்டும் சோதனைக்கு உட் படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி குழந்தை களை அழைத்துச் செல்லும் பேருந்துகளில் முதலுதவிப் பெட்டி, தீத்தடுப்பான், வேகக் கட்டுப்பாட்டு கருவி, சி.சி.டி.வி கேமிரா, அவசரகால வழி, பேருந்து படிக்கட்டுகளின் உயரம், காற்றோட்ட வசதி, கதவு, பிரேக்கின் தன்மை, பேருந்துகளில் இருக்கை அமைப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு வசதிகளும் 100 சதவிகிதம் சரியாக இருக்கும் பட்சத் தில் மட்டுமே சான்று அளிக்கப்படும். மேற்கண்ட அடிப்படை கட்டமைப்புகளில் குறை பாடுகள் இருப்பின் சரி செய்துவர கால அவகாசம் அளிக்கப்படும்.
குறிப்பாக, மோசமான நிலையில் உள்ள வாகனங்களின் தகுதிச் சான்று இரத்து செய்யப்படும். அதே போன்று, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு முழு உடற்பரிசோதனை முகாம் நடத்தப்படுவதுடன் வாகன ஓட்டுநர்கள் அனு மதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்கி, விபத்தில்லாத பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்து அனைத்து ஓட்டுநர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளி வாகனங்களை இயக்குவதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற் கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட் சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, சேலம் வருவாய் கோட்டாட்சியர் அம்பாயிர நாதன் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதிரன், அரசு போக் குவரத்துக் கழக துணை மேலாளர் இராஜேந்திரன், துணை மேலாளர் (வணிகம்) பாண்டியன், வருவாய் வட்டாட்சியர் தாமோதிரன், மோட்டார் வாகன ஆய்வாளர் (சேலம் கிழக்கு) மாலதி மற்றும் பள்ளி வாகன ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர்.



