fbpx
Homeபிற செய்திகள்எஸ்.ஆர்.எம் பிரைம் மருத்துவமனையில் இரைப்பை, கல்லீரல் சிகிச்சை மையம் தொடக்கம்

எஸ்.ஆர்.எம் பிரைம் மருத்துவமனையில் இரைப்பை, கல்லீரல் சிகிச்சை மையம் தொடக்கம்

சென்னையின் முன்னணி பல்நோக்கு மருத்துவமனைகளில் ஒன்றான எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனையானது, தென்னிந்தியாவின் மேம்பட்ட எண் டோஸ்கோபிக் பிரிவுடன் கூடிய இரைப்பை – குடல் மற்றும் கல்லீரல் சிகிச்சை மையத்தை ராமாபுரத்தில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் தொடங்கியுள்ளது. அனைத்து வயதினருக்கும் விரிவான மற்றும் துல்லியமான மருத்துவ சேவைகளை வழங்கும் வகையிலான சிறப்பு கட்டமைப்பு இங்கு உள்ளது.

அதனை தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த் திபன், மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி பி. சிவா, இரைப்பை – குடல் மற்றும் கல்லீரல் நலத் துறை தலைவரும், முதுநிலை மருத்துவ நிபுணருமான டாக்டர் அருள்பிரகாஷ், இரைப்பை – குடல் மற்றும் கல்லீரல் நலத் துறை முதுநிலை மருத்துவ நிபுணர் டாக்டர் தருண் ஜெ. ஜார்ஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

ஜீரண மண்டலத் துறையில் தேர்ந்த அனுபவமும், நிபுணத் துவமும் கொண்ட மருத்துவ வல்லுநர்கள் இந்த மையத்தில் சேவையாற்றுகின்றனர். மருத்துவத் துறையில் குறிப் பிடத்தக்க தொழில்நுட்ப சாதனங்களாக விளங்கும் ஏரியேட்டா 750 750 (Arietta 750) மற்றும் இபி-8000 (EP-8000) எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்ட் ஆகியவையும் இங்கு நிறுவப்பட்டுள்ளன. அவை ஒலிம்பஸ் எக்ஸ் 1 என்ற மருத்துவத் தளத்துடன் இணைந்து உயர் காட்சித்திறன் கொண்ட தெளிவான படங்களை (இமேஜிங்) வழங்குகிறது.
இந்த சிறப்பான வசதிகளைக் கொண்டு இரைப்பை – குடல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு மிகத் துல்லியமான வழிகாட்டுதலுடன் கூடிய, சிறு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள இயலும்.
ஸ்லிம் தெரபியூடிக் எண்டோஸ்கோப் இஜி-840 டிபி எனப்படும் மிக மெல்லிய எண்டோஸ்கோபிக் சாதனம் இங்கு பயன்படுத்தப் படுகிறது. மிக நுட்பமான செயல் முறைகளுக்கும், நோயறிவதற்கும், ஆக்கப் பூர்வமான சிகிச்சைக்கும் இது பெரிதும் உதவுகிறது.

இதுதொடர்பாக தொடக்க நிகழ்வில் சிவா பேசுகையில், “தொடக் கநிலை பரிசோதனை முதல் மேம்பட்ட 24ஜ்7 அவசர சிகிச்சை வரை உலகளாவிய தரத்திலான மருத்துவ சேவைகளை வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று கூறினார்.
டாக்டர் அருள்பிரகாஷ், “உணவுக்குழாய், வயிறு, குடல், பித்தப்பை, கணையம் மற்றும் கல்லீரல் நோய்களுக்கான முழு மையான சிகிச்சை களை இந்த மையம் அளிக்கிறது.
அதிநவீன எண் டோஸ்கோபி சாதனங்கள், நிபுணத்துவம் வாய்ந்த இரைப்பை – குடல் மருத்துவர்கள் மூலம் பாதுகாப்பான மற்றும் வலியற்ற சிகிச்சைகளை இங்கு பெற இயலும். தமிழ்நாட்டிலேயே முதன் மையான எண் டோஸ்கோபிக் அல்ட்ரா சவுண்ட் வசதி இங்கு அமைந்துள்ளது” என கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img