fbpx
Homeபிற செய்திகள்எம்ஜிஎம் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு வாக்கத்தான்

எம்ஜிஎம் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு வாக்கத்தான்

தமிழ்நாட்டில் புற்றுநோய் சிகிச்சையில் முன்னணி நிறுவனமான எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட், மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்கும் நோக்கில், “வாக் இன் பிங்க்” என்ற பெயரில் வாக்கத்தான் நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியது. இந்நிகழ்வில், எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் தொடங்கிய இந்த வாக்கத்தான், அண்ணா நகர் டவர் பார்க்கில் நிறைவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைத் தலைமையகத்தின் (இந்திய கடற்படை) மருத்துவ சேவைகள் பொறுப்பு அதிகாரி சர்ஜன் கமாண்டர் மோகன் டெல் கத்வார், இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில், எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் மருத்துவப் புற்றுநோயியல் துறை இயக்குநரும், முதுநிலை நிபுணருமான ராஜா கூறியதாவது:
மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. விழிப் புணர்வுத் திட்டங்கள் லட்சக்கணக்கான பெண் களைச் சென் றடைந்துள்ள நிலையில், நவீன பரிசோதனை முறைகள் மற்றும் நோயறிதல் தொழில் நுட்பங்களின் பயன்பாடும் அதிக ரித்துள்ளது. ஒவ்வொரு பெண்ணுக்கும் எளிதில் அணுகக்கூடிய, உலகத் தரம் வாய்ந்த சிகிச்சையை வழங்குவதே எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் முக்கிய குறிக்கோளாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் மார்பக புற்றுநோயியல் பிரிவின் முதன்மை மருத்துவர் வேதா பத்மபிரியா பேசுகையில், “புற்றுநோய் வராமல் தடுப்பது ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் சின்னஞ்சிறிய விருப்பத்தேர்வுகளிலிருந்து தொடங்குகிறது. நமது பங்கை நாம் தொடர்ச் சியாகச் செய்வதன் மூலம், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளையும், வலிமையான சமூகங் களையும் நம்மால் கட்ட மைக்க முடியும்.” என்று கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img