fbpx
Homeபிற செய்திகள்கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்

உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் இலவச சர்க்கரை பரிசோதனை முகாம் மற்றும் உணவு முறைகள் கண்காட்சி நடைபெற்றது.

உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பாக கோவை ரேஸ்கோர்ஸில் இலவச சர்க்கரை பரிசோதனை முகாம் நடைபெற்றது.

அப்போது ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் ஆகியவை இலவசமாகப் பரிசோதிக்கப்பட்டது.

ரேஸ்கோர்ஸ் பகுதி மக்கள் மற்றும் நடை பயிற்சி மேற்கொள்வோர் இம்முகாமில் திரளாகக் கலந்துகொண்டு உடல்நலப் பரிசோதனைகள் செய்து கொண்டு பலன் பெற்றனர்.

அதனை தொடர்ந்து சர்க்கரை நோய்யாளிகள் உண்ணும் உணவு முறைகள் பற்றி கண்காட்சியும் நடை பெற்றது. இதனை ஏராளமான மக்கள் பார்வையிட்டு பயன் பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கேஎம்சிஹெச் மருத்துவ மனை நீரிழிவுத் துறை மருத்துவ நிபுணர்கள் டாக்டர் சிவஞானம், டாக்டர் சங்கர் தண்டபாணி, டாக்டர் வித்யா மற்றும் டாக்டர் துரை ராஜ் அர்ஜுனன் ஆகியோர் கலந்துகொண்டு முகாம் மற்றும் உணவு கண்காட்சியினை துவக்கி வைத்தார்கள்.

படிக்க வேண்டும்

spot_img