நீலகிரி மாவட்டம் முழுவதும் 72 வது அனைத் திந்திய கூட்டுறவு வார விழா, தன்னிறைவிற்கான கருவி கூட்டுறவு சங்கங்கள் என்பதை மையக் கருத்தாக கொண்டு நவம்பர் 14-ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
வார விழாவின் முதல் நாளான நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டு ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு துவக்கி வைத்தார்.

பின்னர் பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்தில் மண்டல இணைப்பதிவாளர் மரு. தே.சித்ரா தலைமையில் கூட்டுறவு கொடியேற்றி கூட்டுறவு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் கூட்டுறவு கொடியேற்றப்பட்டு கூட்டுறவு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.
மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டன.
விழாவில் ஒரு பகுதியாக கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆகியோர் களுக்கு உதகை அண்ணா உள் விளையாட்டு அரங்கத்தில் இறகு பந்து, சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை மண்டல இணைப்பதிவாளர் துவங்கி வைத்தார்.
ஆண்களுக்கான கிரிக்கெட் மற்றும் வாலி பால் போட்டியானது எப்பநாடு பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் துணைப் பதிவாளர்கள் சி.அய்யனார், தா.முத்துக் குமார், கமல் சேட், அஜித்குமார், ரா.கௌரி சங்கர், செயலா ட்சியர் (நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம்) மற்றும் ஏராளமான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



