இந்திய சுதந்திரத்துக்காக போராடிய மருது பாண்டியர்கள் திருவுருவச் சிலையை சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைத்த முதலமைச்சர் மு.கஸ்டாலினை சென்னை அண்ணா அறி வாலயத்தில் மாமன்னர் மருதுபாண்டியர் வாரிசுதாரர் பாண்டியன் (நரிக்குடி முக்குளம்), மருது பேரவை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சமயசெல்வம், செய்தி ஆசிரியர் ஜான் சுந்தர ராஜா, ஊடகவியலாளர் ஐ.ஜி.கண்ணன் மற்றும் சுதேசி தமிழர் கட்சி மாநில நிர்வாகி நரிக்குடி கண்ணண் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரி வித்தனர்.
மேலும், நரிக்குடி முக்குளத்தில் மருதுபாண்டியர்களுக்கு மணி மண்டபம் அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கையை மாமன்னர் மருதுபாண்டியர் வாரிசு தாரர் பாண்டியன் வலியுறுத்தினார்.