Homeபிற செய்திகள்கொள்ளிடம் கரையோர பகுதிகளில் வெள்ள அபாயம்

கொள்ளிடம் கரையோர பகுதிகளில் வெள்ள அபாயம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றங்க ரையோர பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிக ளில் தொடர் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2 லட்சம் கன அடிக்கு மேல் உள்ளது.

இந்த தண்ணீர் அனைத்தும் கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த இரு தினங்களாக கொள்ளிடம் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில்,மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கீழணையில் இருந்து முட்டம் கிராமம் வரை வருவாய், நீர்வளம், நெடுஞ்சாலை, ஊரக உள்ளாட்சி உள்ளிட்ட துறைக ளின் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

எய்யலூர் கிராமத்தில் பொது மக்களிடம் கடந்த காலங்களில் அதிக அளவு தண்ணீர் சென்ற போது ஏற்பட்ட நிகழ்வுகளைக் கேட்டறிந்தார்.கொள்ளிடம் ஆற்றில் மயிலா டுதுறை மாவட்டம் குமாரமங் கலம், கடலூர் மாவட்டம் ஆதனூர் இடையே கட்டப்படும் கதவணையுடன் கூடிய பாலம் கட்டும் பணிகள் குறித்து சிறப்புத்திட்டம் செயற்பொறியாளர் பாலமுருகனிடம் கேட்டறிந்தார்.
ஓமாம்புலியூர் கிராமத்தில் கொள்ளிட படுகையில் தண்ணீர் சென்றால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆட்சியரிடம் பொதுமக்கள் விளக்கிக் கூறினர்.

ஆய்வின்போது, சிதம்பரம் உதவி ஆட்சியர் ராஷ்மிராணி, கொள்ளிடம் வடிநில கோட்ட நீர்வளத் துறை செயற்பொறியாளர் காந்தரூபன்,சிறப்புத் திட்டம் செயற்பொறியாளர் பாலமுருகன்,வட்டாட்சியர் சிவக்குமார், உதவிச் செயற்பொறியாளர் கொளஞ்சிநாதன், காட்டுமன்னார்கோ வில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சகதியா பர்வீன் நிஜார், வருவாய் ஆய்வாளர் பாலசுப்ர மணியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

அதேபோல கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் கொள்ளிடம் ஆற்று உபரி நீர் திறக்கப்பட்டதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்டா வட்டாரங்களை வேளாண் இணை இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனை முன்னேற்று நேற்று பரங்கிப்பேட்டை வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் சிதம்பரத்தில் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேளாண் இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார்,துணை இயக்குனர்கள் பிரேம் சாந்தி,செல்வம் ஆகியோர் ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டனர்.

தொடர்ந்து வட்டார திட்டப் பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினர். பரங்கிப்பேட்டை வட்டார உதவி இயக்குனர் ச.நந்தனி,வேளாண்மை அலுவலர் வீரமணி, துணை வேளாண்மை அலுவலர் திருசிவசங்கர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img