திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார் பாக விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடை பெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன தலைமையில் நேற்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்திற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் 33335 எக்டரிலும், சிறு தானியங்கள் 8048 எக் டரிலும், பயறுவகைகள் 4779 எக்டரிலும், எண் ணெய்வித்து பயிர்கள் 29432 எக்டரிலும், கரும்பு 8316 எக்டரிலும் பயிரிடப்பட்டுள்ளது என்று கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்தார்.
வேளாண் கிடங்குக ளில் நெல் 25271 மெ.டன், சிறுதானியம் 13.18 மெ.டன், பயறுவகைகள் 49.41 மெ.டன், எண்ணெய்வித்து 324.70 மெ.டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநி யோகம் செய்யப்பட்டு வருகிறது. தேவையான உரங்கள் உள்ளது எனவும், கூட்டுறவு மற்றும் தனியார் கடைகளில் சேர்த்து யூரியா 18255 மெ.டன், டிஏபி 3508 மெ.டன், பொட்டாஷ் 2259 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 708 மெ.டன், காம்ளெக்ஸ் உரம் 12709 மெ.டன் இருப்பில் உள்ளது எனவும் கூட்டத்தில் தெரி விக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும், நீர்வரத்து கால்வாய் மற்றும் போக்குக்கால்வாய் தூர்வார உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும், பி.எம்.கிசான் நிதி உதவி தகுதியான விவசாயிகளுக்கு பெற்று வழங்கிட உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை விவசாயிகள் முன் வைத்தனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலு வலர் இரா.ராம்பிர தீபன், வேளாண்மை இணை இயக்குநர் (பொ), .சே.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், (வேளா ண்மை) மலர்விழி, உதவி திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) .ஆர்.அருண், இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள், பார்த் திபன், வேளாண்மை துணை இயக்குநர்கள், .சுந்தரம் மற்றும் ரவிச் சந்திரன், முன்னோடி வங்கி மேலாளர், கௌரி, அரசுதுறை அலுவலர்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாய பொதுமக்கள் கலந்து கொண்டனர்.