கோவையின் புதிய அடையாளமாக ஜி டி நாயுடு வளாகத்தில் “எக்ஸ்பிரிமெண்டா அறிவியல் மையம்” நாளை (பிப்.28) துவக் கப்படவுள்ளது.இது குறித்து ஜி. டி. நாயுடு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜி டி கோபால், அறங்காவலர் அகிலா சண்முகம், பொது மேலாளர் சுரேஷ் நாயுடு ஆகியோர் கூறியதாவது:
புதிய கலந்தாய்வு அறிவியல்
கோவையில் 1950-ம் ஆண்டு ஜி டி நாயுடு அறக்கட்டளையை மறைந்த ஜி டி நாயுடு ஏற்படுத்தினார். இதன் கீழ் ஜி டி அறிவியல் அருங்காட்சியகம், ஜி டி கார் மியூசியம் போன்றவை செயல்பட்டு வருகின்றன.ஜி டி நாயுடு அறக்கட்டளை தற்போது “எக்ஸ்பிரிமெண்டா” என்ற புதிய கலந்தாய்வு அறிவியல் மையத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மையத்தின் நோக்கம், குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தி, பயிற்சியாகவும், பொழுதுபோக்காகவும், எளிமையாக கற்றுக்கொள்ள வைப்பதாகும்.
அறிவியல் மையத்தை, தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை துவக்கி வைக்கிறார்.
விழாவில் சென்னை, ஜெர்மன் தூதரக அதிகாரி மைக்கேலா குச்லேர், கௌரவ விருந்தினராக பங்கேற்கிறார்.கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை பாரதிய வித்யா பவன், தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.இந்த மையத்தின் முக்கிய நோக்கம், உலக அளவில் எங்கிருந்தாலும், அறிவியலை எளிதான முறையில் கற்க வேண்டும் என்பது தான். இந்த மையம், இளைய தலைமுறையினருக்கு அறிவியலை கற்றுத்தருவதோடு கோவையின் பொக்கிஷமாகவும் இருக்கும். அதோடு, கோவையில் புதிய அடையாளமாகவும் இருக்கும்.
பொதுமக்கள் பார்வைக்காக எக்ஸ்பெரிமெண்டா அறிவியல் மையம் வரும் மார்ச் 1 முதல் பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை மையத்தை பார்வையிடலாம். திங்கள் கிழமைகள், தேசிய விடுமுறை நாட்கள் தவிர, அனைத்து நாட்களிலும் இந்த மையம் திறந்திருக்கும்.
அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கும், பிற தனிநபர்களுக்கும் சிறப்பு தள்ளுபடி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.