19-வது தேசிய அளவிலான சிலம்பம் சேம்பியன்ஷிப் போட்டிகள், ராஜபாளையம் ஐயன்கேந்திரா சிபிஎஸ்இ பள்ளி உள் விளையாட்டு அரங்கில், மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுக்கும் நடைபெற்றது.
தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகா, மத்திய பிரதேசம், டெல்லி, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், பாண்டிச்சேரி மற்றும் 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தமிழக அணியில் கோவை சிலம்பாலயா மற்றும் இம்மார்டல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள், மினி சப் ஜூனியர் பெண்கள் பிரிவில் நேகா ஸ்ரீ, குத்து வரிசை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். ஆண்கள் குத்து வரிசை பிரிவில் சச்சின் ஆலிவர் தங்கப்பதக்கம் வென்றார். நேரடி சண்டையில் (ஆண்கள் பிரிவில்) ரோகன் (under 44) எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். பெண்கள் பிரிவில் லியானா தென்றல் (under35) எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார் .
இரட்டை வாள் வீச்சு போட்டி
சப் ஜூனியர் பெண்கள் பிரிவில் நேத்ரா இரட்டை வாள் வீச்சில் தங்கப் பதக்கம் வென்றார். அலங்கார வீச்சு பிரிவில் கற்பகா வெள்ளி பதக்கம் வென்றார். ஆண்கள் பிரிவில் சர்வேஷ் ஒற்றை சுருள் வாள் வீச்சு பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். இரட்டை வாள் வீச்சு போட்டியில் நிக்கிலேஷ் வெள்ளி பதக்கம் வென்றார். கம்பு சண்டையில் ஸ்ரீ வர்ஷன் (Under 50) எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.
ஜூனியர் பெண்கள் பிரிவில் குத்து வரிசை போட்டியில் சிவானி வெண்கல பதக்கம் வென்றார் . ஆண்கள் பிரிவில் மித்ரேஷ் ராம் நேரடி சண்டையில் (under 50) எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். ஆயுத ஜோடி பிரிவில் அபிமன்யு, ஹேமந்த் தங்கப்பதக்கம் வென்றனர்.மினி சப் ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் பிரிவில் தமிழ்நாடு அணி ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பெற்றது. வெற்றி பெற்ற வீரர்களை பயிற்சியாளர்கள் சரண்ராஜ் ரஞ்சித்குமார் மற்றும் அருண் பாண் டியன், பெற்றோர்கள் வாழ்த்தினர்