fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு பிரஸ் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு சந்திரகுமார் எம்எல்ஏ பரிசு

ஈரோடு பிரஸ் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு சந்திரகுமார் எம்எல்ஏ பரிசு

ஈரோட்டில் பிரஸ் கிளப் சார்பில் நடைபெற்ற இரண்டு நாட்கள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று அணிகளுக்கு ரொக்க பரிசு, கோப்பை மற்றும் பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன.

ஈரோடு பிரஸ் கிளப், கிரிடாய் அமைப்பு மற்றும் சுதா மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய இரண்டு நாள் கிரிக்கெட் போட்டிகள் ஈரோடு கருங்கல்பாளையம் சோளீஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் ஈரோடு, நாமக்கல் பகுதியை சேர்ந்த 10 அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஈரோடு பிரஸ் கிளப் தலைவர் பி.எம்.சம்பத் தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.பி.மோகன், இணைச்செயலாளர் குணசேகரன், ஏ.எஸ்.ரமேஷ், பொருளாளர் யாசின் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தார்.

நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஈரோடு கிழக்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

இந்த போட்டியில் முதலிடம் பெற்ற ரெட் விங்ஸ் அணிக்கு 7500 ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு பெற்ற ரெட் டிராகன் அணிக்கு 5 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசு பெற்ற ஈகிள் கிரிக்கட் அணிக்கு 2500 ரூபாயும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் 3 அணிகளுக்கும் வெற்றி கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.

பரிசு பெற்ற வீரர்களை சோளீஸ் விளையாட்டு மைதானத்தின் நிர்வாக இயக்குனர் கண்ணன், ஈரோடு பிரஸ் கிளப் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img