fbpx
Homeபிற செய்திகள்கொங்குநாடு மருத்துவமனையின் சார்பில் இலவச மருத்துவ முகாம்

கொங்குநாடு மருத்துவமனையின் சார்பில் இலவச மருத்துவ முகாம்

கோவை கொங்குநாடு மருத்துவம னையின் சார்பில் நடமாடும் இலவச பேருந்து மருத்துவ கிளினிக்கின் முகாம் தடாகம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.


இம்முகாமிற்கு தடாகத்தைச் சேர்ந்த துரைசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேலுசாமி, ஆனந்தன், கேசவ மணிபழனிசாமி ஆசிரியர், ஊர் கவுடர் ஜெயலட்சுமி சுகுமார், நடராஜன் 24 – வீரபாண்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் குணசேகரன், சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


முகாமை கொங்குநாடு மருத்து வமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜு துவக்கி வைத்தார்.


மேலும் கொங்குநாடு மருத்துவ மனையின் பொது மருத்துவர் டாக் டர் செல்வராஜ், டாக்டர் பாலாஜி சுந்தரேசன், டாக்டர் கௌரி லட்சுமி, காது மூக்கு தொண்டை நிபுணர் டாக்டர் அனு பிரியாமற்றும் மருத் துவர்கள் செவிலியர்கள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


இந்த இலவச நடமாடும் பேருந்து கிளினிக்கில் ரத்த கொதிப்பு, சர்க்கரை பரிசோதனை, இசிஜி, எக்ஸ்ரே, சிறுநீரக பரிசோதனைகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட நோயா ளிகளுக்கு இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டன.
அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img