திமுக இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் மருத்துவ அணிகள் ஏற்பாடு செய்திருந்த விழாவில், நீட் தேர்வை தடை செய்வதற்கான கையெழுத்து இயக்கத்தை வீட்டு வசதித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் முத்துசாமி கூறிய தாவது: 50 நாட்களுக்குள் 50 லட்சம் கையெழுத்து சேகரிக்கும் இலக்குக்கு மாறாக, நீட்டுக்கு எதிரான மக்களின் கோபத்தால் அது 1 கோடியை எட்டும். மாவட்டத்தில் 1 லட்சம் கையெழுத்து இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடி யரசுத் தலைவரின் ஒப்புதலை அளிக்கும் வகையில் இந்த கையைழுத்து இடப்பட்ட தபால் கார்டுகள் அனுப்பப்படும்.
முன்ப பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் 85 சதவீத மருத்துவ இடங்கள் மாநில அரசால் நிரப்பப்பட்டு வந்த நிலையில், 15 சதவீத இடங்கள் அனைத்து மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்படு மைய அரசிடம் ஒப்படைக் கப்பட்டன.
இப்போது, நீட் என்ற பெயரில், மாநில அரசின் அதிகாரத்தை அபகரித்து, பிற மாநில மாணவர்கள் நம் மாநிலத்தில் மருத்துவ இடம் பெற வழிவகை செய்து, நம் ஏழைமாணவர்களின் மருத்துவ வாய்ப்பைப் பறித்துள்ளது மத்திய அரசு.
எனவே, இதுவரை 20 மாணவர்களின் உயிரைப் பறித்த நீட் தேர்வை எதிர்க்கிறோம். அனைவரும் நீட் தேர்வை எதிர்த்து, நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் இயக்கத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் அணி நிர்வாகிகள் பிரகாஷ், திருவாசகம், டாக்டர் விவேக், திமுக மாநகர் செயலாளர் எம்.சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.