தேனி மாவட்டத்தில் உள்ள முத்து தேவன்பட்டி உப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சென்று கட்சியின் கொடி ஏற்றி பின்னர் அல்லிநகரம் பகுதியில் தேனி பெரியகுளம் சாலையில் அமைந்துள்ள தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை கட்டிடத்தில் புதிய கட்சி அலுவலகத்தை மாநில பொதுச் செயலாளர் சந்தனபிரியா ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி பசுபதி பாண்டியன் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சந்தனபிரியா, இமானுவேல் சேகரனாருக்கு அரசு விழா எந்த அரசு அறிவிக்கிறதோ அந்த அரசுக்கு முழு ஆதரவு தருவோம் என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார். இவர்களுடன் திண்டுக்கல் மாநில செயலாளர் பி.பி.நடராஜன் மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் ஆதி ஆனந்த பாண்டியன், கருப்பையா பாண்டியன், தேனி நகர வடக்கு மாவட்ட நகர செயலாளர் சதீஷ்குமார், நகர துணைச் செயலாளர் அலெக்ஸ் பாண்டியன், தேனி நகர இணைச்செயலாளர் சிவா பாண்டியன், தேனி வடக்கு மாவட்ட செயலாளர் லட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.