fbpx
Homeபிற செய்திகள்சர்வதேச தினங்கள் கொண்டாட்டம்

சர்வதேச தினங்கள் கொண்டாட்டம்

இந்திய இளைஞர் விடுதிகள் சங்கம், தமிழ்நாடு, ஈரோடு வேளாளர் மகளிர் கல்வியியல் கல்லூரியுடன் இணைந்து ஈரோடு செங்கோடம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில், “சர்வதேச இசை, நீரியல் மற்றும் யோகா தினங்கள்” கொண் டாடப்பட்டது.

கல்லூரி முதல்வர் டாக்டர்.மல்லிகா, யூத் ஹாஸ்டல்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் டாக்டர்.ஏ.ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

யூத் ஹாஸ்டல் தேசிய சுற்றுச்சூழல் குழு உறுப்பினரும், ஈரோடு தலைவருமான டாக்டர்.பி.அய்யப்பன் தலைமையில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. டாக்டர்.ஏ.ராஜா, டாக்டர்.பி.அய்யப்பன் ஆகியோர் மாணவர்களுக்கு எழுதுபொருள்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி, ஆசிரியர் மாதேஷ், நிர்வாகிகள் சந்திரா தங்கவேல், பூங்கொடி, சரண்யா, மரகதம், தனலட்சுமி, சாந்தி மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img