fbpx
Homeபிற செய்திகள்சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தன்னார்வலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தன்னார்வலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

கரூரில், சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தன்னார்வலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகம் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் நேற்று சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச் சிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. இதில் குட்கா, புகையிலை, மதுபானம், போதை வஸ்துக்கள் குறித்த புகைப்படங்களை உருவகப்படுத்தி அணிந்து கொண்ட நபர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு சி.எஸ்.ஐ பிஷப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர்.

நகர காவல் ஆய்வாளர் விதுன் குமார் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் உமேஷ் சாமுவேல் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண் டனர்.

படிக்க வேண்டும்

spot_img