தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்து கொண்டு மாவட்ட அளவில் கபடி போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்ற கோவில் பட்டி கம்மவார் மேல்நி லைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு களையும் சான்றிதழ் கேடயமும் வழங்கி வாழ்த்தினர் . அதனைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி நிகழ்ச்சியில் உரை யாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலா ளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி கூடுதல் ஆட் சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், சார் ஆட் சியர் கௌரவ் குமார், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம் மசக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.