fbpx
Homeபிற செய்திகள்நந்தா பொறியியல் - தொழில் நுட்ப கல்லூரிகளில் வளாகத்தேர்வு

நந்தா பொறியியல் – தொழில் நுட்ப கல்லூரிகளில் வளாகத்தேர்வு

ஈரோடு நந்தா பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் இறுதியாண்டு மாணவர்களுக்கென, அமெரிக்காவின் மெக்ஸிகோ மாகாணத்தினை தலைமையிடமாகக் கொண் டுள்ள “அக்ரிகேட் இன்டெ லிஜன்ஸ்” நிறுவனமானது தனது சிறப்பு வளாகத் தேர்வினை நடத்தியது.

ஸ்ரீ நந்தா அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன் தலைமையில் நடைபெற்ற இவ்வளாகத் தேர்வினை “அக்ரிகேட் இன்டெலிஜன்ஸ்” நிறுவனத்தின் மனிதவள மேலாளர் பெர்னாண்டோ துவக்கி வைத்தார்.

மேலும், நந்தா பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் யு.எஸ்.ரகுபதி, மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் முனைவர் ச.நந்தகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

430க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அறக்கட்டளை செயலர் எஸ்.நந்த குமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.திருமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img