fbpx
Homeபிற செய்திகள்நந்தா பொறியியல் - தொழில்நுட்ப கல்லூரியில் வேலைவாய்ப்பு தினம்

நந்தா பொறியியல் – தொழில்நுட்ப கல்லூரியில் வேலைவாய்ப்பு தினம்

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரி மற்றும் நந்தா தொழில்நுட்பக் கல்லூரி சார்பாக “வேலைவாய்ப்பு தினம்“ நடைபெற்றது.

கோவையில் இயங்கும் கார்ட்ராபிட் மென்பொருள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை கண்காணிப்பாளருமான ரமேஷ் சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

நந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினர் பானுமதி சண்முகன் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.


டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டேட்டா பார்டன், விப்ரோ கார்ட்ரேட், ஜாஸ்மின் இன்ஃபோடெக், காக்னிசன்ட், ஆக்சென்ச்சர், விர்துஷா, அவா சாஃப்ட், ரெனால்ட் நிசான், பிரேக்ஸ் இந்தியா, லூகாஸ் டிவிஎஸ், ஸ்பிக் போன்ற 139 நிறுவனங்கள் கல்லூரிகளுக்கு வருகை தந்துள்ளதாகவும், இதனால் 2125 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அறக்கட்டளைத் தலைவர் வி.சண்முகன் தெரிவித்தார்.


நந்தா பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் யு.எஸ்.ரகுபதி, செயலர்கள் நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி, நந்தா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் டாக்டர்.நந்தகோபால், வேலை வாய்ப்பு செல் ஒருங்கிணைப்பாளர்கள் கே.வி.பிரபு, எஸ்.சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img