fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு கலை கல்லூரியில் தமிழ்ப்பேரவை தொடக்க விழா

ஈரோடு கலை கல்லூரியில் தமிழ்ப்பேரவை தொடக்க விழா

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்ப்பேரவை, கல்லூரிப் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் வி.சி.ராஜா விஜய சங்கர் கலந்து கொண்டார்.


தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.பன்னீர் செல்வம், உலகத் திருக்குறள் பேரவை நடத்திய 95 இடங்களில் 95 நூல்கள் வெளியீடு 95 கருத்த ரங்குகளை ஒரே நாளில் நடத்திய உலக சாதனை நிகழ்வை பாராட்டி ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வோர்ல்டு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் வழங்கிய சான்றிதழை கல்லூரியின் செயலாளர் கே.கே.பாலுசாமியிடம் அவர் வழங்கினார்.


மேலும் கரூர், பாரதி பவாணர் செந்தமிழ் மன்றம் நடத்திய 100 நாள் சொற்பொழிவு சாதனை நிகழ்வில் சொற்பொழிவு நிகழ்த்திய தமிழ்த் துறைத் தலைவர் பன்னீர்செல்வத்துக்கு ஆல் இந்திய புக் ஆப் ரெகார்ட்ஸ் வழங்கிய பாராட்டுச் சான்றிதழை, செயலர் வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தார்.


கல்லூரி தலைவர் வி.ராஜமாணிக்கம் முதல்வர் முனைவர் இரா.சங்கர சுப்பிரமணியன், இயக்குநர் இரா.வெங்கடாசலம், தேர்வுக் கட்டுப்பாட்டு ஆணையர் எம் வெங்கடாசலம் உதவி ஆணையர் எஸ். கார்த்திகேயன் விலங்கியல் துறைத் தலைவர் த.சித்ரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img