திமுக துணை பொது செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. மாநகர மகளிரணி அமைப்பாளர் ஜெயக்கனி வரவேற்றார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச் சருமான கீதாஜீவன் 151 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி னார். வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜ் மோகன் செல்வின், மாநில பேச்சாளர் சரத்பாலா சிறப்புரை ஆற்றினர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் இதுவரை 10 ஆயிரம் பேருக்கு தையல் இயந்திரம் வழங்கியுள்ளோம். மேலும் விண்ணப்பித்துள்ள பெண்களுக்கு விரைவில் வழங்கப்படும். முந்தைய காலங்களில் பெண்களுக்கு சமூகத்தில் எந்த மதிப்பும் மரியாதையும் இல்லாத நிலை இருந்தது. வாக்களிப்பதற்கு ஆண் களுக்கு மட்டுமே உரிமை இருந்தது. 1920ல் பெண்களுக்கும் போராடி வாக்குரிமை கிடைத்தது. 1989ல் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை வழங்கியது கலைஞர் ஆட்சியில் தான். பெண்கள் ஏன் படிக்க வேண்டும் என்று ஆண்களை மட்டும் தான் முன்னர் படிக்க வைத்தார்கள். அதனை மாற்றியது திமுக தான். தமிழ்நாடு முற்போக்கு மாநிலமாக முன்னேறி வருகிறது. அனைத்து பெண்களும் படிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். பள்ளி படிப்பு மட்டுமின்றி கல்லூரியும் படிப்போம் என்று பெண்கள் விரும்புகின்றனர். தொழில் தொடங்க பெண்களுக்கு 10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது அதில் 7.5 லட்சம் கட்டினால் போதும் 2.5 லட்சம் மானியம், அதே போல் ஆண்களுக்கும் வழங்கப்படுகிறது.
தொழில் அதிபர்களாக வர வேண்டும் என்று திமுக ஆட்சியில் பயிற்சி அளித்து வருகிறோம். அதிக பெண் தொழிலதிபர்கள் இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி, பணப்புழக்கம் உள்ளது. இந்த நிலையை மாற்றியது திமுக தான். எல்லோருக்கும் உடல்நலம் ஆரோக்கியம் முக்கியம். அதற்கு சத்தான உணவு களை சாப்பிட வேண்டும். குழந்தை களுக்கும் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை கொடுக்க வேண்டும்.
ஒன்றிய அரசு பல்வேறு வகையில் தமிழ்நாட்டை வஞ்சித்தாலும் முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண், என பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
ஒரு சிலர் தேர்தலுக்கு மட்டுமே மக்களை சந்திக்க வருவார்கள். நீர்க்குமிழி போல் காணமல் போய்விடுவார்கள் தேர்தலுக்கு முன் புதிதாக கட்சியை ஆரம்பித்து ஒரு மாயயை உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். ஆனால் திமுக மக்களோடு மக்களாக இருக்கிறது ஒரு குடும்பத்தின் ஆணிவேராக இருந்து பெண்கள் பணியாற்று வதால் குடும்பமே வளர்ச்சி யடைகிறது. இவ்வாறு அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
மாநகர திமுக செய லாளர் ஆனந்தசேகரன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், மண்டல தலைவர் பாலகுருசுவாமி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தேவி, பகுதிச் செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமார், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாநகர இளைஞரணி அமைப் பாளர் அருண் சுந்தர், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப் பாளர்கள் பிரபு, அருணாதேவி, தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, கவுன் சிலர்கள் விஜயகுமார், வைதேகி, சுப்புலட்சுமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப் பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



