கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை டெக் பொறியியல் கல்லூரியில், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு கல்லூரியின் செயலாளரும், முன்னாள் சுற்றுசூழல்துறை அமைச்சரும், பவானி சட்டமன்ற உறுப்பின ருமான, கே.சி.கருப்பண்ணன், விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் முனை வர்.ஏ. பி.ஆச்சர் (சி.இ.ஓ, ஏ.ஐ.சி நிட்டீ, புத்தாக்கவளர் மையம், கர்நாடகா), புனித் (மேலாளர், ஏ.ஐ.சி நிட்டீ, கர்நாடகா), ராஜேஷ் குமார் பழனிச்சாமி (பயிற்சி ஒருங்கிணைப்பாளர், எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம், சென்னை), கௌதம் லோகநாதன் (தொழில் தொடங்குபவர் வழிகாட்டி மற்றும் நிறுவனர், ஸ்கை ஹை அகாடமி, கோவை) ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கல்லூரியின் தலைவர் பி.வெங்கடாசலம், இணை செயலாளர் ஜீ.பி.கெட்டிமுத்து, தலைமை நிர்வாக அதிகாரி, ஜி.கௌதம், கல்லூரியின் அறக்கட்டளை உறுப்பினர் கே.ஆர்.கவியரசு, முதல்வர் முனைவர் பி.தங்கவேல், துணை முதல்வர் முனைவர் எஸ்.பிரகாசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.