fbpx
Homeபிற செய்திகள்ராமநாதபுரம் நகராட்சி பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

ராமநாதபுரம் நகராட்சி பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் தலைமை ஆசிரியர் (பொ) ரெங்கநாயகி தலைமையில் நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோமசுந்தரம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சபினா அம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இக்கூட்டத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் போக்சோ குறித்தும், பாலியல் தீங்குகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் குழந்தைகளிடம் பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல், குழந்தைகளுக்குப் பாலியல் தொந்தரவுகள் குறித்தும் அத்தீங்குகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்தும்

மாணவர்களிடையே ஏற்படும் நடத்தை மாற்றங்களை கண்காணித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

ஆசிரியை ஹேனா, நூருல் வதூதியா, மீனா ஆகியோர் போக்சோ சட்டம் குறித்து விளக்கி பேசினர். மேலும் கூட்டத்தில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் நாராயணன், பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் சங்கீதா, உறுப்பினர்கள் பாஸ்கரன், கருப்பையா, சுமையா, ஈதுல் பாயிசா, அஜய் குமார், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் ராமேஸ்வரி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img