சிதம்பரம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மைய மான அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட தேர் தல் அலுவலரும் சிதம்பரம் மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரு மான ஜா.ஆனிமேரிஸ்வர்ணா புதன் கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட குன்னம், அரியலூர்,ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி,சிதம்பரம் (தனி) ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதி வான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்களை அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாக்கு எண் ணும் மையத்தில் பேரவைத் தொகுதி வாரியாக தனி அறையில் வைக்கப்பட் டுள்ளது. மேலும், 3 அடுக்குப் பாதுகாப்பில் துணை ராணுவம், உள்ளூர் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட் டுள்ளன.
இந்த நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வேட்பாளர்கள் மற்றும் அவர் களின் முகவர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத் தும் அலுவலருமான ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா புதன்கிழமை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது,மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை,கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை,வேட்பாளர் கள் மற்றும் முகவர்கள் பார்வையிட ஏற் பாடு செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு அறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். மேலும், பாதுகாப்பு குறிப்பேட்டு பதிவுகளை பார்வையிட்டு அதில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி. ஸ்வர்ணா கையொப்பமிட்டார்.
ஆய்வின்போது, அரியலூர் வரு வாய்க் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர்கள் சந்திரசேகர் (பேரிடர் மேலாண்மை), வேல்முருகன் (தேர்தல்), இளவரசன் (ஆண்டிமடம்), அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.