fbpx
Homeபிற செய்திகள்கொங்கு வியாபாரிகள் நல சங்கம் சார்பில் 2500 பேருக்கு அன்னதானம்

கொங்கு வியாபாரிகள் நல சங்கம் சார்பில் 2500 பேருக்கு அன்னதானம்

திருப்பூரில் கொங்கு வியாபாரிகள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் காட்டன் பி சக்திவேல் தலைமையில் நடைபெற்ற வணிகர் தின விழா முதலாம் ஆண்டு முன்னிட்டு திருநீலகண்டபுரம் 7 ஆம்நம்பர் பஸ் ஸ்டாப் அருகே 2500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை அசைவு அன்னதான வழங்கும் நிகழ்ச்சியும் மேலும் மாலை கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த விழாவினை திருப்பூர் திமுக தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.கர்ணன் தேவர், மண்டல தலைவர் தம்பி ஆர்.கோவிந்தராஜ், திருப்பூர் கறிக்கோழி வியாபாரிகள் நல சங்கம் தலைவர் தாமோதரன், திமுக பகுதி செயலாளர் போலார் சம்பத், உசேன், கவுன்சிலர் லதா, கேபிள் மோகன், தாமோதரன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.

வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்களை சிலம்பாட்டம் ஒயிலாட்டம் புலியாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்தி வரவேற்றனர். மேலும் இந்த விழாவில் தலைவர் தாமோதரன், மாவட்ட செயலாளர் தேவராஜ், பொதுச் செயலாளர் சாந்தவரராஜன், மாவட்ட நிர்வாக குழு ரமேஷ், மாவட்ட அமைப்பு செயலாளர் சித்தன், மாவட்ட பொருளாளர் கண்ணன், மாவட்ட மகளிர் அணி தலைவி ஜானகி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோஸ்வா தண்டபாணி, மாநகரச் செயலாளர் தமிழ் மணி, மாநகர் மாவட்டத் துணைத் தலைவர் சந்திப், மாவட்ட மகளிர் அணி செயலாளர் பிரபா, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் கிருஷ்ணவேணி, மாவட்ட மகளிர் இணை ஒருங்கிணைப்பாளர் நந்தினி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆனந்தி, கொங்கு நகர் பகுதி துணைச் செயலாளர் முருகேஸ்வரி உள்ளிட்ட கொங்கு வியாபாரி நல சங்கத்தின் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img