fbpx
Homeபிற செய்திகள்மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்

மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்

கொல்லிமலை ஜவகர் சிறுவர் மன்றம் விரிவாக்க மையம் சார்பாக கொல்லிமலை வாழவந்தி நாடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மே – 6 முதல் மே 15 வரை கோடைக்கால கலைப் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் தற்காப்புக்கலை, ஓவியம், கிராமிய நடனம், பரதநாட்டியம் போன்ற நுண்கலைகளில் பயற்சி வழங்கப்பட்டது.

இந்த பயிற்சியில் 45 மாணவ மாணவிகள் பங்கேற்றனர், பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு ஜவகர் சிறுவர் மன்ற விரிவாக்க மைய திட்ட அலுவலர் மா.தில்லை சிவக்குமார் சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். ஜவகர் சிறுவர் மன்ற விரிவாக்க மைய பரதநாட்டிய ஆசிரியை ஸ்ரீமதி, தற்காப்புக்கலை ஆசிரியர் சரவணன், கிராமிய நடன ஆசிரியர் வினோத் , ஓவிய ஆசிரியர் விஜயகுமார் ஆகியோர் பத்து நாட்கள் முகாமை சிறப்பாக நடத்தியமைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக ஜவகர் சிறுவர் மன்ற கிராமிய நடன ஆசிரியர் பாண்டியராஜன் நன்றியுரை ஆற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img