fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு பிரார்த்தனை

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு பிரார்த்தனை

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தொகுதி வாரியாக, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்‘ என்ற சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி, தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதியில் தொழில் முனைவோர், விவசாயிகள், உப்பு உற்பத்தியாளர்கள், மீனவர்கள் மற்றும் வழக்கறிஞர்களோடு கலந்துரையாடினார்.

பின்னர் அவர் தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்தார்.

இந்நிகழ்வின்போது, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சண்முகநாதன், கடம்பூர் ராஜூ, சி.த.செல்லப்பாண்டியன் வக்கீல் பிரபு மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img