உடற்பயிற்சி மற்றும் விளையாட்டின் போது ஏற்படும் வேர்வை மற்றும் ஈரப்பதத்தை வேகமாக உறிஞ்சும் ஆக்டிவ் வேர் ஆடைகள் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி பிராண்டான டெக்னோஸ்போர்ட், சென்னை பெசன்ட் நகரில் தனது புதிய ஷோரூமை திறந்தது.
இது சென்னை நகரில் திறக்கப்படும் முதல் ஷோரூம் ஆகும். 1,600 சதுர அடி பரப்பளவில் பெசன்ட் நகரில் திறக்கப்பட்டுள்ள இந்த ஷோரூம், இந்தியாவைப் பொறுத்தவரை 15வது, தமிழகத்தைப் பொறுத்தவரை திருப்பூர், சேலம் மற்றும் கோவையைத் தொடர்ந்து 4வது ஷோரூம் ஆகும்.
இந்த சிறப்பான வளர்ச்சியை கருத்தில் கொண்டு நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் சென்னையில் மேலும் 3 பிரத்யேக ஷோரூம்களையும் அதே போல் மதுரை, திருச்சி, வேலூர், கரூர், ஓசூர் ஆகிய இடங்களிலும் புதிய ஷோரூம்களை திறக்க இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
சென்னை ஷோரூம் துவக்கத்தை நினைவுகூறும் வகையில், 1,200க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி ஆர்வலர்கள் நட்பு தின ஓட்டத்தில் பங்கேற்றனர். இந்த பிராண்ட் மாரத்தானின் ஆக்டிவ் வேர் கூட்டாளியாகச் செயல்படுகிறது. புதிய ஷோரூம் திறப்பு விழாவையொட்டி 3கி.மீ., 5 கி.மீ. மற்றும் 10 கி.மீ. ஓட்டப் பந்தய நிகழ்ச்சி பெசன்ட் நகர் ஷோரூமில் துவங்கி நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களுக்கு டீ-சர்ட் பரிசாக வழங்கப்பட்டது.
புதிய ஷோரூம் திறப்பு குறித்து டெக்னோஸ் போர்ட் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் சுனில் ஜுன்ஜுன்வாலா கூறுகையில், “தமிழகத்தில் தயாரிக்கப்படும் எங்களின் புதுமையான ஆடைகள் சென்னை நகர மக்களின் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு பொருத்தமாக இருக்கும். இவை அனைவரும் வாங்கக்கூடிய விலையில் இருக்கும்“ என்றார்.
இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி புஸ்பன் மைட்டி கூறுகையில், “இந்த நிதியாண்டு இறுதிக்குள் சென்னையில் மட்டும் மூன்று ஷோரூம்களை திறக்க திட்ட மிட்டுள்ளோம். அத்துடன் மதுரை, திருச்சி, வேலூர், கரூர் மற்றும் ஓசூர் உள்ளிட்ட நகரங்களிலும் எங்கள் ஷோரூமை நாங்கள் திறக்க உள்ளோம்“ என்றார்.
தென்னிந்தியாவில் தனது விரிவாக்கத்தை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா முழுவதும் மொத்தம் 50 ஷோரூம்களை திறக்கடெக் னோஸ்போர்ட்
திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



