பிராமண நல்வாழ்வு முன்னேற்றம் என்ற கொள்கைக்காகவும் ‘பிறர் முன்னேற்றமே தமது உயர்வு` என்ற நோக்கத்துக்காகவும், கோவையைச் சேர்ந்த தொழில் முனைவோரால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் ‘குளோபல் பிராமின் வெல்பேஃர் போரம்’ (GBWF) அமைப்பின் முப்பெரும் விழா 2025 கோவை ராம் நகரில் அமைந்துள்ள சுபஸ்ரீ ஹாலில் நடைப்பெற்றது.
குழு உறுப்பினர்களை ஊக்கப்படுத்தவும், தன்னலம் பாராமல் சமுதாய நலனுக்காய் இடையிராது பாடுபடுவோரில் தேர்ந்தெடுக்கப் பட்டவரை கௌரவிக்கும் விதமாகவும், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவ மாணவியருக்கு உதவும் பொருட்டும் ஆகிய மூன்றயும் இணைத்து ‘முப்பெரும் விழா 2025’ கொண்டாடப்பட்டது.
“சங்கர் ஐகேர் “நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஆர்.வீ.ரமணி தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.
கோடைக்காலத்தில் கோவைப் பொதுமக்கள் தாகம் போக்க சிவானந்தா காலனி, ஆர்.எஸ்.புரம் ஆகிய இடங்களில் ‘குளோபல் பிராமிண் வெல்பேஃர் போரம்’ முன்னெடுப்பால் நடைபெற்ற ‘நூறு நாள் நீர் மோர் பந்தல் சேவை’ திட்டத்தில் தொண்டாற்றி தங்கள் நேரம், பொருளுதவி மற்றும் உடல் உழைப்பு நல்கிய குழு உறுப்பினர்களை ஊக்குவிக்கும் முகமாய் நிகழ்ச்சி தொடங்கியது.
பிறகு டாக்டர் ஆர்.வீ.ரமணி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சமூகத்தொண்டர், க்ரீன் ‘லா’ என்ட்ரப்னர் முதன்மை அதிகாரி அவினாஷ் நாராயண்ஸ்வாமிக்கு ‘சுற்றுச்சூழல் தொலைநோக்கு முன்னோடி’ என்ற விருதும் கேடயமும் வழங்கினார்.
அடுத்து அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவ மாணவியருக்கு சீருடை, நோட்டுப்புத்தகம் மற்றும் கல்வி கட்டணம் ஆகியவை வழங்கப்பட்டன.
விழாவின் இறுதியாய் தன் ஒப்பற்ற செயல்திறனால் எண்ணற்றோருக்கு தன் சங்கரா கண் நிறுவனத்தின் மூலம் பார்வை அளித்து வரும் டாக்டர் ஆர்.வீ.ரமணிக்கு ‘நம்பிக்கை பார்வை’ என்ற விருது அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
முன்னதாக தலைவர் சி.வி.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றுப் பேசினார். முடிவில் பொருளாளர் கோவிந்த கிருஷ்ணன் நன்றி கூறினார்.



