fbpx
Homeபிற செய்திகள்புற்றுநோய் பாதிப்புகளை தவிர்க்க ஹெச்.பி.வி தடுப்பூசி அவசியம்: - டாக்டர்கள் அறிவுரை

புற்றுநோய் பாதிப்புகளை தவிர்க்க ஹெச்.பி.வி தடுப்பூசி அவசியம்: – டாக்டர்கள் அறிவுரை

சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா (SII) தலைமையிலான நாடு தழுவிய பொது சுகாதார முன்முயற்சியின் ஒரு பகுதியாக, “கான்கெர் ஹெச்.பி.வி கேன் சர் மாநாடு 2025” கோயம்புத்தூரில் தொடங்கியது.
இந்நிகழ்வில், மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்று கூடி ஹெச்.பி.வியின் பொது சுகாதாரத் தாக்கங்கள் குறித்து ஆழமாக விவாதித்தனர். இந்த குழுவில் பிஎஸ்ஜி ஐ.எம்.எஸ்-ஆர் பிரிவுத் தலைவர் டாக்டர் டி.வி.சித்ரா பட், மனு மருத்துவமனை முன்னணி ஆலோசகர் டாக்டர் கே. ஆரத்தி, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நியோநேட்டாலஜி தலைவர் டாக்டர் பி. செந்தில்குமார், பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன தலைவர் டாக்டர் ஏ. ஜெயவர்தனா, கேன்சர் இன்ஸ்டிட்யூட் அடையாறு மகளிர் மருத்துவ புற்று நோயியல் நிபுணர் டாக்டர் ஜெயஸ்ரீ, மேசோனிக் மெடிக்கல் சென்டர் ஃபார் சில்ட்ரன் மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் ஆலோசகர் டாக்டர் நந்தினி குமரன் ஆகியோர் அமர்வை நெறிப்படுத்தினர்.
இதில் ஹெச்.பி.வி கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயை மட்டும் ஏற்படுத்தாது என்று பேச்சாளர்கள் விளக்கினர். இது ஆண்களையும் பெண்களையும் பாதிக்கும் பிறப்புறுப்பு, ஆசனவாய், ஆண்குறி மற்றும் தொண்டை புற்று நோய்களுடனும் தொடர்புடையது. பெரும்பாலான ஹெச்.பி.வி (HPV) தொற்றுகள் 15 முதல் 25 வயதுக்குள் ஏற்படுவதால், ஆரம்பகால விழிப்புணர்வு மற்றும் சரியான நேரத்தில் தடுப்பு மிக வும் முக்கியம்.
இப்போது குறைவான விலையில் ஹெச்.பி.வி (HPV) தடுப்பூசி கிடைப்பதால், ஹெச்.பி.வி தொடர்பான புற்றுநோய்களிலிருந்து அனைவரையும் பாதுகாப்பது இன்னும் எளிதாகிவிட்டது என தெரிவித்தனர்.
“நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் இந்தக்கூட்டங்கள் மூலம் ஹெச்.பி.வி கர்ப்பப்பைவாய்ப் புற்று நோய் மற்றும் பிற புற்றுநோய்களுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற் படுத்த விரும்புகிறோம்,” என்று சீரம் இன்ஸ் டிட்யூட் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் பராக் தேஷ்முக் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img