fbpx
Homeபிற செய்திகள்பாப்பம்பட்டி கூட்டுறவு வங்கியில் பின் தங்கிய மகளிருக்கான இ-ஆட்டோ வழங்கும் விழா

பாப்பம்பட்டி கூட்டுறவு வங்கியில் பின் தங்கிய மகளிருக்கான இ-ஆட்டோ வழங்கும் விழா

கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பாப்பம் பட்டி கிளை மூலமாக தமிழ்நாடு அரசு அறிவித்த பொருளாதாரத்தில் பின் தங்கிய மகளிருக்கான இ-ஆட்டோ வழங்கும் விழா வங்கியின் கூடுதல் பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் ராம கிருஷ்ணன் தலைமையில் நடந்தது. வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர்/ துணைப்பதி வாளர் தியாகு வரவேற்புரை வழங்கினார். அப்பொழுது வங்கியின் கூடுதல் பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் உரை ஆற்றிய போது வங்கியின் பாப்பம்பட்டி கிளை சிறப்பாக செயல்பட்டு அதிக அளவில் பொதுமக்களிடமிருந்து வைப்பு தொகையாக ரூ.20 கோடி ரூபாயும் கிளையின் மூலமாக வாடிக்கையாளருக்கு கடனாக ரூ.66.50 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தவணை தவறிய கடன்கள் இல்லை என்ற நிலையில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டினார்.

தமிழ்நாடு அரசு அறிவித்த பொருளாதாரத்தில் பின் தங்கிய மகளிருக்கான இ-ஆட்டோ-வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், பொருளாதாரத்தில் பின் தங்கிய மகளிருக்கான வருமானத்தை பெருக்கிடவும் மற்றும் மகளிருக்கான அங்கீகாரம் கிடைத்திட-வும் இதுபோன்ற வருமா னம் ஈட்ட கூடிய காரியங்களை செய்வதன் மூலம் அதிக நற்பலன்கள் கிடைக்கும் என்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மகளிருக்கான வாழ்வாதாரம் உயர்ந்திடவும் நல்ல வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டார்.

வங்கியின் சிறந்த வாடிக்கையா ளர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். அப்பொழுது வங்கியின் பாப்பம்பட்டி கிளையின் வாடிக்கையாளர் டி.நித்தியாவுக்கு ரூ.4 லட்சம் மகளிருக்கான இ-ஆட்டோ கடன் வழங்கப்பட்டது. பாப்பம்பட்டி கிளையில் உளள 2 சுய உதவி குழுக்களுக்கு ரூ.27லட்சமும் பண்ணை சாரா கடன் திட்டத்தின் மூலமாக ரூ.50 ஆயிரம் வரை ஆக மொத்தம் ரூ.32,50,000 தொகைக்கான கடன்கள் வழங்கினார். நிறைவாக வங்கியின் பொது மேலாளர் (கூ.பொ) கே.பி.ரமேஷ் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img