fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்டத்தில் இயற்கை விவசாய திட்டத்தில் நான்கரை ஆண்டுகளில் 9,105 பேர் பயன்

கோவை மாவட்டத்தில் இயற்கை விவசாய திட்டத்தில் நான்கரை ஆண்டுகளில் 9,105 பேர் பயன்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த விவசாயி செல்வராஜ் தோட்டத்தில் ரூ.16.88 லட்சம் மானியத்துடன் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் உயர் தொழில் நுட்ப பசுமை குடில் அமைத்து வெள்ளரி சாகுபடி செய்துள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் தலைமையில் செய்தியாளர் பயணம் மேற் கொள்ளப்பட்டது.

இச்செய்தியாளர் பயணத் தின்போது துணை இயக்குநர் தோட்டக்கலைத்துறை சித்தார்த் தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆனந்தகுமார், தோட் டக்கலைத்துறை உதவி இயக்குநர்(பொள்ளாச்சி தெற்கு) சௌமியா, உதவி தோட்டக்கலை அலுவலர் ஆறுச்சாமி உட்பட பலர் கலந்துகொண்டார்.
இச்செய்தியாளர் பயணத் தின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியதாவது:

தேசிய தோட்டக்கலை இயக்கம்‌‌ திட்டத்தின் கீழ்‌ பொள்ளாச்சி வட்டம், ஜமீன் ஊத்துக் குளியை சேர்ந்த விவசாயி செல்வராஜ் தோட்டத்தில் ரூ.16.88 லட்சம் மானியத்துடன் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் உயர் தொழில் நுட்ப பசுமை குடில் அமைத்து வெள்ளரி சாகுபடி செய்துள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அப்பசுமை குடிலில் பயிரிடப்படும் பயிர்கள் குறித்தும், சந்தைப்படுத்துதல் குறித்து கேட்டறியப்பட்டது.
மேலும், தோட்டக்கலை துறையில் செயல்படுத்தப்படும் இதுபோன்ற உயர் தொழில்நுட்ப திட்டங்களின் மூலம் பட்டதாரி விவசாயிகள் மற்றும் சிறு, குறு விவசாயிகள் குறைந்த இடத்தில் அதிக லாபம் ஈட்ட முடியும் என்பதால் வரும் ஆண்டுகளில் இதுபோன்ற திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதிக விவசாயிகள் உயர் தொழில்நுட்ப பசுமைகுடில் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் தோட்டக்கலைத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் 40 சதவீத மானியத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் பரப்பு அதிகரித்தல், பழைய தோட்டங்களை புதுப்பித்தல், 50 சதவீத மானியத்தில் நீர் சேமிப்பு கட்டமைப்பு, பசுமைக்குடில் அமைத்தல், நிழல்வலை கூடா ரம், நிலப்போர்வை அமைத்தல், ஒருங்கிணைந்த உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு மேலாண்மை, தரம் பிரித்து சிப்பம் கட்டும் அறை, வெங்காய சேமிப்புக் கிடங்கு, நடமாடும் விற்பனை ஊர்தி ஆகியவை அறுவடைக்கு பின் செய் நேர்த்தி இனங்கள், மகரந்தச் சேர்க்கையை ஊக்குவிக்க தேனீ பெட்டிகள், தேனீ காலனிகள், தேன் எடுக்கும் இயந்திரங்கள் வழங்குதல் மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மானியம் வழங்குதல் உள்ளிட்ட வகையில் கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.15.38 கோடி மதிப்பில் 9,105 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

இச்செய்தியாளர் பய ணத்தின்போது தேசிய தோட் டக்கலை இயக்கம்‌‌ திட் டத்தின் கீழ்‌ பசுமைகூடாரம் அமைத்து பயன்பெற்ற பொள்ளாச்சி வட்டம், ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த விவசாயி திரு.செல்வராஜ் அவர்கள் தெரிவித்தாவது,
என் பெயர் செல்வராஜ் நான் ஜமீன்ஊத்துக்குளியில் கடந்த 25 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். கடந்த ஆண்டு தோட்டக்கலை துறையின் மூலமாக ஒரு ஏக்கர் பரப்பளவில் ரூ.16.88 இலட்சம் மானியத்துடன் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் உயர் தொழில் நுட்ப பசுமை குடில் அமைத்து வெள்ளரி சாகுபடி செய்து இருந்தேன். தட்பவெப்ப நிலையைக் கட்டுப்படுத்த முடிகின்ற கார ணத்தினால் வருடத் தின் எல்லாக் காலத்திலும் பயிர் செய்ய முடிகிறது. அதனால் ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக் கின்றது. சந்தையில் பருவமில்லாத காலத்தில் வரும் விளைப்பொருட்களுக்கு அதிக வரவேற்பும், அதிக விலையும் உள்ளது. தொடர்ந்து, உற்பத்தி செய்ய முடிவதால் பசுமைக் கூடாரம் என் போன்ற விவசாயிகளுக்கு மிகவும் பய னுள்ளதாகவும், லாபகரமா கவும் உள்ளது இந்த திட்டத்தை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் தெரிவித்தார்.

வெளியீடு:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கோவை மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img