திருப்பூர் கணக்கம்பாளையம் பஞ்சாயத்தில் உள்ள பொங்குபாளையத்தில் அமைந்துள்ள ரீகெயின் ரீபிராசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வேல்முருகனால் தொடங் கப்பட்டுள்ள உலர் கழிவு மேலாண்மை மையத்தினை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார்.
துணை ஆணையாளர் மகேஸ்வரி மற்றும் மாநகராட்சி மற்றும் நகர அபிவிருத்தி நிர்வாகத்தின் ஓய்வுபெற்ற (தமிழ்நாடு கழிவு மேலாண்மை மன்றத்தின் தொழில்நுட்ப ஆலோசகர்) முருகேசன், திருப்பூர் மாநகராட்சி நகர் நல அலுவலர் ஆகியோர் பங்கேற்றனர்.
தொழில் நிறுவனங்களிடம் சேகரிக்கப்படும் மொத்த உலர் கழிவுகளை மறு பயன்பாட்டிற்கு பயன்படும் வகையில் செயலாக்கம் செய்வதற்காக நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு தோராயமாக 90 டன் உலர்ந்த கழிவுகளை வகைப்படுத்தி தகுந்த மறு பயன்பாட்டு நிறுவனங்களுக்கு அறிவியல் முறைப்படி அனுப்பி வைக்கப்படுகிறது.
இதற்கு உறுதுணையாக இருந்த திருப்பூர் மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு கழிவு மேலாண்மை மன்றம் திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் பதிவு பெற்ற சங்கங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்கேற்றன.



