கதிர்கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக போதைத் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து
(போதையற்ற தமிழகம்) என்னும் தலைப் பில் நிகழ்ச்சி நடை பெற்றது.
இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தின் காவல் கண்காணிப் பாளர் டாக்டர் கே.கார்த்தி கேயன் கலந்துகொண்டு மாணாக்கர்களிடத்தில் போதை பழக்கங்களின் மூலம் ஏற்படும் தீமைகள் அவற்றால் ஏற்படும் குற்றங்கள் தண்டனைகள் மனசிதைவு அடைதல் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத் ததுடன் சினிமா படங்களில் காட்டும் வாழ்க்கையைப் போல நிஜ வாழ்க்கையில் நடக்காது.
மேலும் மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமை யாகாமல் தங்களுடைய கல்வியில் கவனம் செலுத்தி உயர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் அவர் பேசியதாவது:பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டா கிராம், ரீல்ஸ் போன்ற செயலிகளுக்கு மாணவர் கள் அதிகம் கவனம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும். இணைய விளையாட்டுக் களும் மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும். இதன் வழியாக சைபர் கிரைம் அதிகமாக நிகழ்ந்து வருகின்றன.
AI தொழில் நுட்பத்தின் மூலம் பல குற் றங்கள் நிகழ்த்தப் பட்டு வருகின்றன. அதே சமயம் பெண்களுக்கான குற்றங்கள் அதிகளவில் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. அதனை தடுக்கும் வகையில் காவல்துறை காவலன் என்னும் செயலையினை அறிமுகப்படுத்தி உள்ளது.
இச்செயலியின் வழியாக பெண்களுக்கு ஏற்படும் இன்னல்கள் சிக்கல்கள் குற்றங்களை களைவதற்கு வழிவகுக்கிறது அதனால் மாணவிகள் அனைவரும் அச்செயலையை தங்களுடைய அலைபேசியில் பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும். மேலும் மாணவர்கள் அனைவரும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் போதையற்ற தமிழகத்தை உருவாக்குவதற்கு இளைஞர்கள் சக்தி செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து போதையற்ற தமிழகத்திற்கான உறுதி மொழியினை மாணவர்களை ஏற்கச் செய்தார். இந்நிகழ்விற்கு கல்விக் குழுமத்தின் தலைவர் ஈ.எஸ். கதிர், செயலர் லாவண்யா கதிர் ஆகியோர் தலைமை தாங்கினார்.
அதனை தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர். கற்பகம் வாழ்த்துரை வழங்கி சிறப்பு செய்தார். மேலும் இந்நிகழ்விற்கு தமிழ்த்துறை கலையியல் புலத்தின் தலைவர் வி.வினோதினி வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியினை நாட்டு நலப்பணி திட்டத்தின் திட்ட அலுவலர் பொ.பிரகாஷ் ஏற்பாடு செய்திருந்தார். திரளான மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.