கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல கூட்டத்தில் 22 வது வார்டு உறுப்பினர் கோவை பாபு பேசியதாவது: சேரன் மாநகர் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கழிவு நீர் சாக்கடைக் கால்வாய்களில் கழிவு நீர் வெளியேற முறையான வசதி அமைப்புகள் இல்லாததால், சாக்கடை கழிவு நீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி நின்று, கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார கேடுகள் ஏற்படுகிறது.
இந்த மோசமான நிலையினை மாற்ற பொதுமக்களின் நலன் கருதி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆசிரியர் காலனி நேதாஜி பார்க் பகுதியை சுற்றி பல இடங்களில் தாழ்ந்த நிலப்பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கிய நிலையிலேயே உள்ளது.
இதனால் பொது மக்களுக்கு சுகாதாரக் குறைவினை ஏற்படுத்தும் டெங்கு, மலேரியா போன்ற அபாயகரமான நோய்கள் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது, இதனை தடுத்து முறையாக மழைநீர் வெளியேறவும், கொசுக்களால் நோய்கள் பரவாமலும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்ப டவேண்டும்.
விளாங்குறிச்சி – தண்ணீர்பந்தல் சாலை அமைக்கும் பணி
விளாங்குறிச்சி – தண்ணீர்பந்தல் சாலை அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும். குமுதம் நகர்ப் பகுதி யில் தார் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும் வரை, பாதையில் உள்ள குழிகளை சமன்படுத்தப்பட வேண்டும்.
மலர் அவென்யூ மற்றும் எழில் நகர் பகுதிகளில் பகுதி அளவு முடிந்த நிலையிலுள்ள சாலையை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசி னார்.
திராவிடன் அறக்கட்டளை தலைவரான மாநகராட்சி உறுப்பினர் கோவை பாபுவின் கோரிக்கைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.



