கோவை பீளமேடு அருகே தியாக நண்பர்கள் குழுவின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இதில் சிறுவர், சிறுமியர்களின் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகி ருஷ்ணன், முன்னாள் எஸ்பி ரத்ன சபாபதி, டாக்டர் சுகுமாரன், முன்னாள் டிஎஸ்பி வெள் ளிங்கிரி, வரதராஜன், மாற்றுத் திறனாளி முன் னாள் அலுவலர் சந்திரசேகர், சம்பத் ராணி, என்சிசி அலுவலர் கவிதா, கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் தியாக நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன் அனைவரையும் வரவேற்று பேசினார். மருத்துவர் சுகுமாரன் மருத்துவ பணியில் இலவ சமாக சேவை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து வெள்ளிங் கிரி வாழும் கலை குறித்து யோகா நன்மை குறித்து பேசினார்.
ரத்ன சபாபதி கல்வியின் அவசியம் அது சார்ந்த உறுதிமொழியை ஏற்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பேசிய காவல் ஆணையாளர் பால கிருஷ்ணன், “மாணவர்களை நல்வழிப்படுத்தும் பாய்ஸ் கிளப் தேவை அதிகமாக உள்ளதால் கோவையில் 24 கிளப்கள் செயல்பட்டு வருகிறது. சிறுவர்கள் முதல் பெரி யவர்கள் வரை சமூக ஊட கங்களில் அடிமையாக வாழ்கின்றனர். இது தவ றான செயல்”என்றார்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு தியாக நண்பர்கள் குழுவின் சார்பில் விருதுகள் வழங் கப்பட்டன. பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் மற்றும் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.