fbpx
Homeபிற செய்திகள்அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்: கரூர் மாவட்டத்தில் 64 தொழில் முனைவோர்களுக்கு ரூ.8.32 கோடி...

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்: கரூர் மாவட்டத்தில் 64 தொழில் முனைவோர்களுக்கு ரூ.8.32 கோடி மானியம் – மாவட்ட ஆட்சியர் தகவல்

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் மானியம் பெற்று இயங்கி வரும் தொழில் நிறுவனத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் செய்தியாளர் பயணம் மேற்கொண்டு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கவும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக் கவும், சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையின் சார்பாக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக நடப்பு பட்ஜெட் கூட்டத் தொட ரில் சிறு குறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.5,833 கோடி நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. இதன் நோக்கம் புதிய தொழில் முனைவோர்களை உரு வாக்கவும், அதிகளவு வேலைவாய்ப்புகளை உரு வாக்குவதேயாகும். அண் ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என்ற புதிய திட்டத்தினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனை வோரின் பொருளா தார வளர்ச்சியை ஊக்கு விக்கும் வகையிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் எண்ணிக் கையை அதிகரி க்கும் வகையிலும் அறிமுகப் படுத்தி உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும். புதிதாக தொடங்கப்படும் தொழில்களுக்கும் மற்றும் இயங்கி கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கும், மானியம் வழங்கப்படும். மானியம் மொத்த திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் ஆகும். மானிய உச்ச வரம்பு உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.1 கோடி, சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.75 லட்சம், வணிகம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கடன் திரும்ப செலுத்தும் காலம் முழுவதும்(10 ஆண்டுகளுக்கு மிகாமல்) 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். தொழில் முனைவோர் தம் சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் 35 சதவீதம் மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவை சார்ந்த எந்த தனிநபரும் மற்றும் பங்குதாரர், கூட்டாண்மை, பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கல்வி தகுதி ஏதுமில்லை. வயது வரம்பு 18 முதல் 55க்குள் இருக்க வேண்டும். அந்த வகையில் மாவட்ட தொழில் மையம் சார்பாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் மானியம் பெற்று கரூர் நகரப் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் தொழில் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் 64 தொழில் முனை வோர்களுக்கு ரூ.8.32 கோடி மானியமாக வழங்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட மேலாளர் ரமேஷ், உதவி பொறியாளர் மனோஜ், தொழில் நிறுவன உரிமையாளர் பிரபு மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img