ஆண்டுதோறும் அக்டோபர் 13 ம் தேதி சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. மழைக்காலங்களில் பேரிடர் ஏற்படாமல் தடுக்கவும், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தவும் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் அலுவ லக வளாகத்தில் தலை மையிடத்து துணை வட்டாச்சியர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பல்வேறு பேரிடர் மீட்பு பொருட்களை கொண்டு, பாதிக்கப்பட்டோரை காப்பாற்றுவது குறித்து செயல்விளக்கங்களை, தீயணைப்பு அலுவலர்கள் செய்து காட்டினர்.
இயற்கை மற்றும் செயற்கை பேரிடர் காலங்களில் எடுக்க வேண்டிய நடைமுறை, பொருட்கள் மற்றும் உயிர் சேதம் ஏற்படாமல் செயலாற்ற வேண்டியது, காயம் அடைந்தவர்களை எவ்வாறு மீட்பது என்பது தொடர்பான ஆலோசனைகளை தீய ணைப்பு அலுவலர்கள் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் தேர்தல் பிரிவு துணை வட்டாச்சியர் பாலமுருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.