fbpx
Homeபிற செய்திகள்ராணுவ ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாமில் 1,832 ஓய்வூதியர் முறையீட்டிற்குத் தீர்வு

ராணுவ ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாமில் 1,832 ஓய்வூதியர் முறையீட்டிற்குத் தீர்வு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் நடைபெற்ற, 183-வது இராணுவ ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாமில் இராணுவ ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இம்முகாமில் 1,832 ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர். அவர்களின் குறைகள் கேட்கப்பட்டு, இராணுவ ஆவணக் காப்பகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் பி.சி.டி.ஏ. ஸ்பர்ஸ் ஆகியவற்றின் உதவியுடன் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.

இந்த முகாமில் குறிப்பிடத்தக்க வகையில், லட்சுமி, ஜெயந்தி, சரஸ்வதி ஆகியோரது குறைகள் கேட்கப்பட்டு, குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டன.
லட்சுமி என்ற பயனாளிக்கு ரூ.5,98,020 குடும்ப ஓய்வூதிய நிலுவைத் தொகைக்கான காசோலையை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் வழங்கினார்.

சென்னை இராணுவக் கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் ஐ.டி.ஏ.எஸ்., சரஸ்வதி என்ற பயனாளிக்கு ஓய்வூதியப் பிறப்பாணை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img