கோவையைச் சேர்ந்த கல் லூரி மாணவர்கள் இணைந்து பயன்படுத்தப்பட்ட துணிகள், கல்வி உபகரணங்கள், சானிடரி நாப்கின்களை சேகரித்து கூஞ்ச் என்ற தன்னார்வ அமைப்புக்கு அனுப்பினர். இவை அனைத்தும் ஏழை குழந்தைகள் மற்றும் பெண் களுக்கு வழங்கப்பட உள்ளன.
டெல்லியை தலைமையிட மாகக் கொண்டு கூஞ்ச் என்ற தன்னார்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு இந்தியா முழுவதிலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சேக ரிக்கும் பொருட்களை திரட்டி நாடு முழுவதிலும் உள்ள ஏழை மக்களுக்கு வழங்கி வருகிறது.
இதனிடையே கோவை ராம கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் மூலம் மாணவர்கள், பேராசிரி யர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து கோவை மாவட் டத்தில் பயன்படுத்தப்பட்ட உடைகள், துணி வகைகள், கல்வி உபகரணங்கள், சானிடரி நாப்கின்களை சேகரித்தனர்.
கடந்த 22 நாட்களாக மொத் தமாக 106 பெட்டிகளில் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இவை அனைத்தும் கூஞ்ச் தலைமையிடத்திற்கு அனுப்பப்பட்டன. இந்த வாக னத்தை ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர் ஸ்வாதி ரோகித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவை அனைத் தையும் தேவைப்படும் ஏழை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட உள்ளன.
இது குறித்து ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர் ஸ்வாதி ரோகித் கூறுகையில், “உடை இல் லாமல் எந்த ஒரு இந்தியனும் சிரமப்படக் கூடாது என்பதற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கூஞ்ச் தன்னார்வ அமைப்பு செயல்படுகிறது.
இங்கு எந்த வகையான துணிகளும் உபயோகமற்றது என்று அல் லாமல், அனைத்தையும் பெற்று மறு சுழற்சி முறையில் உபயோகிக்கத்தக்க உடைகளாக மாற்றி தேவைப்படும் மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகின்றன.
ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் மாற்றும் பேராசிரியர்கள் இதற்காக தங்கள் பங்களிப்பை ஆற்றியுள்ளனர். தொடர்ந்து இந்த முன்னெடுப்பை மேற்கொள்வோம்.” என்றார்.
இந்நிகழ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக் குமார், எஸ்.என்.ஆர். சன்ஸ் மக்கள் தொடர்பு மேலாளர் – நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.பிரகதீஷ் வரன் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.